Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜலகண்டேஸ்வரர் கோபுரத்துக்குள் பூஜை: ... வரதராஜ பெருமாள் கோயிலில் சாய்ந்த கோபுர கலசம்! வரதராஜ பெருமாள் கோயிலில் சாய்ந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று திருவாழியாழ்வான் திருநட்சத்திரம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2013
10:06

மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனர். சக்கரத்தானை "திருவாழியாழ்வான் என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள். இவருக்கு "ஹேதிராஜன்  என்ற திருநாமமும் உண்டு. சுவாமி தேசிகன் இவரை "சக்ர ரூபஸ்ய சக்ரிண என்று போற்றுகிறார். அதாவது "திருமாலுக்கு இணையானவர் என்று பொருள். சுவாமி தேசிகன் அருளிய சுதர்ஸனாஷ்டகத்தை தினமும் பாராயணம் செய்தால் எண்ணிலடங்காத நன்மைகளை அடையலாம்.

பெரியாழ்வாரும் சக்கரத்தாழ்வாரை ""வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்று வாழ்த்துகிறார். ""சக்கரத்துடன் இணைந்தவரே திருமால் என்பது  நம்மாழ்வாரின் வாக்கு. அவர் திருமாலுக்கு ""சுடராழி வெண்சங்கேந்தி வாராய் என்று பாமாலை சூட்டுகிறார். சுதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார்.  நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்தவர் சுதர்ஸனர்தான் என்கிறது புராணம். அதேபோல், திருமாலின் வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்தார் சுக்ராச்சாரியார்.

அவரின் எண்ணத்தை திசை திருப்பியவர் சக்கரத்தாழ்வார். அதேபோல் சிசுபாலனை சக்கரத்தாழ்வாரைக் கொண்டே அழித்தார் ஸ்ரீகிருஷ்ணர். கஜேந்திர மோட்சத்தில் சக்கரத்தாழ்வாரைக் கொண்டே முதலையின் கழுத்தை அறுத்து கஜேந்திரனை காப்பாற்றினார் திருமால். புண்டரிக வாசுதேவன் மற்றும் சீமாலி ஆகிய அரக்கர்களின் ஆணவம் அழிந்திட சக்கரத்தாழ்வாரே காரணம். மகாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழித்திட கிருஷ்ண பரமாத்மா சுதர்ஸனரையே பயன்படுத்தினார்.

அநீதிகளை அழிக்க (பகவானுக்கு) பயன்படுகின்ற சக்கரத்தாழ்வாரின் சந்நிதிகள் பல திவ்ய தேசங்களிலும் உள்ளன. காஞ்சி வரதர் கோயில், திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருமோகூர், திருக்குடந்தை உள்ளிட்ட ஆலயங்களில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார் சக்கரத்தாழ்வார். இந்த சுதர்ஸனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது. சக்கரத்தாழ்வார் தனது பதினாறு ஆயுதங்களை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி ... மேலும்
 
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் உத்தரகோசமங்கை ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar