நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குரு. இவர் தேவர்களின் குருநாதர். ஜோதிட சாஸ்திரப்படி இவர் இருக்கும் ராசியிலிருந்து எண்ணினால் 5,7,9 ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். நமது ராசிக்கு ஏழரைச்சனி, அஷ்டமச்சனி போன்றவை நடந்தாலும் குரு பார்த்தால் கஷ்டங்கள் ஏற்படாது என்பதால் குரு பார்க்க கோடி நன்மை என்பர்.