பதிவு செய்த நாள்
22
ஜூன்
2013
10:06
வேடசந்தூர்:குட்டம் கரட்டுப்பட்டியில் விநாயகர், மாரியம்மன், கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மங்கள வாத்தியத்துடன் புனித தீர்த்தம், முளைப்பாரி அழைத்து வரப்பட்டது.கும்பாபிஷேகம் நடந்தது. பத்மகிரிபாபா தலைமை வகித்தார். கும்பாபிஷேகத்தை ரமணி சாஸ்திரிகள், அம்பி சுப்பிரமணியம் செய்தனர். அன்னதானம் நடந்தது. வடமதுரை: பாடியூர் கிராமம், நாட்டண்மைகாரன்பட்டியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி பூஜையுடன் துவங்கி, கால பூஜை நடந்தது. கடங்கள் புறப்பாடாகி, விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஆதிசேஷன் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். தாண்டிக்குடி: தாண்டிக்குடி அருகே உள்ள பூலத்தூரில் கோதண்டராமசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.மூன்று நாள் யாகசாலை பூஜையில் வேத மந்திரங்களுடன் சிவாச்சாரியர்கள் கலசத்திற்கு புனித நீர் தெளித்தனர். ஆஞ்சநேயர் மற்றும் அர்ச்சன சுவாமி சிலைகள் பிரதிருஷ்டை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நத்தம்: காசம்பட்டியில் உள்ள கல்யாண கற்பகவிநயாகர், முத்தாலம்மன், பொன்னழகி அம்மன் ஆகிய கோயில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.ராமேஸ்வரம், சுருளி, அழகர்கோயில், கொடுமுடி, காசி, கரந்தமலை கன்னிமார்தீர்த்தம், வைகை ஆகிய புண்ணிய தீர்த்தங்களால் மூன்று கோயில்களின் கலசத்தில் சிவாச்சாரியார் கணேச குருக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. வானத்தில் கருடன் வட்டமிட்டது. காசம்பட்டி, வத்திப்பட்டி, ரெட்யடிப்பட்டி, கவரயபட்டி, பரளி, பட்டணம்பட்டி உட் பட பல கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.