பதிவு செய்த நாள்
22
ஜூன்
2013
10:06
பழநி:ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பருத்தியூர் பெரியநாயகியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஜூன், 21 காலை நாச்சியார் அம்மன், கருப்பண்ணசாமி, மாடக்கவுண்டசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், பெரியநாயகியம்மன், சின்னம்மன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் காணியாளர் மகுடீஸ்வரன், பண்ணாடி பெரியசாமி, மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் ஜானகிசின்ராஜ், பொள்ளாச்சி சாக்கு வியாபாரிகள் சங்க தலைவர் ராஜசரவணன் மற்றும் கொங்கு ஆந்தை குலம், கொங்கு மாடகுலம், 24 மனை தெலுங்கு செட்டியார் பருத்தியூர் கோலவார் குலம், விஸ்வகர்மா ஆசாரியார்கள் ஆகிய குலப்பங்காளிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.