குரங்கனி முத்துமாலை அம்மன் கோயில் ஜூலை 2ம் தேதி கால்நாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2013 10:06
ஏரல்: குரங்கனி முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப்பெருந் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 2ம் தேதி கோயிலில் கால்நாட்டு விழா நடக்கிறது. குரங்கனி முத்துமாலை அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்கிழமை அம்மனுக்கு கொடைவிழா நடக்கிறது. விழாவில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு செல்வர். ஆனிப்பெருந்திருவிழாவில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், மதியம்பூஜை, இரவு நாராயணசுவாமி வீதி உலா ஆகிய சிறப்பு அம்சங்கள் இடம்பெறும். மேலும் மாவிளக்கு எடுத்தல், நேமிசம் கொண்டு வருதல், ஆன்மீக சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த ஆண்டு ஆனிப்பெருந்திருவிழா ஜூலை 16ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வரும் ஜூலை 2ம் தேதி கோயிலில் கால் நாட்டப்படுகிறது. கால்நாட்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். இதை முன்னிட்டு கோயிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஏற்பாடுகளை குரங்கனி 60 பங்கு நாடார் பொதுமக்கள் செய்து வருகின்றார்.