பதிவு செய்த நாள்
29
ஜூன்
2013
10:06
சேரன்மகாதேவி : சேரன்மகாதேவியில் தாமிரபரணி ஆற்றில் சென்னை அம்பத்தூர் ஸ்ரீயோகமாயா புவனேஸ்வரி பீடம் பரமஹம்ஸ ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் ராஜராஜேஸ்வரி ஸ்வர்ண அம்பாளுக்கும், ஸ்படிக லிங்கத்திற்கும் 64வித அபிஷேகத்தை நடத்தினார். மூலிகைகள், பச்சிலைகள், அன்னம், சந்தனக்கலவை, தாமரை உட்பட புஷ்ப வார்க்கங்கள் குங்குமம், செந்தூரம் ஆகிய திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டன. தாமிரபரணி நதிக்கு புடவை, வேஷ்டி, சர்க்கரை பொங்கல், சந்தனம், புஷ்பம் அளித்து பிரார்த்தனை நடத்தினார் பரத்வாஜ் ஸ்வாமிகள். சுமங்கலிகள் லலிதா ஸகஸ்ரநாம பாராயணம், சங்கீதம் இசைத்தனர். வேதகோஷம் முழங்கப்பட்டன. தீப ஆரத்தி நடந்தது.லட்டு, பால் பாயாசம், சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்யப்பட்டன. நெய் அபிஷேகமும், தேன் அபிஷேகமும் 100லிட்டர் அளவில் நடத்தப்பட்டன. அபிஷேகத்திற்கு முன்னதாக தவம் நடத்திய ஸ்வாமிகள் தமிழ்நாட்டு மக்கள் சுபீட்சம் அடைய வேண்டிய பிரார்த்தனை நடத்தினார். வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.