பொங்கலூர்:கண்டியன்கோவில், கண்டீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா நடந்தது.இக்கோவிலில், கடந்தாண்டு திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஓராண்டு நிறைவடைந்ததால், முதலாம் ஆண்டு விழாகொண்டாடப்பட்டது. ஜூன் 27 தீர்த்தம் எடுத்து வரப்பட்டது; ஜூன் 28 காலை 8.00 மணிக்கு விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாக வாசனை, பஞ்சகவ்ய பூஜையை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.