சுவாமிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கருவறையில் ஆறடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சிதருகிறார் முருகப்பெருமான். இவர் வலக்கையில் தண்டம் ஏந்தி, இடக்கையைத் தொடையில் வைத்துஇருக்கிறார். செவ்வாய்க்கிழமை மாலையில் சகஸ்ரநாம மாலையும், அறுங்கோண வைரப்பதக்கமும் அணிந்து பக்தர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறார். வியாழக்கிழமை மாலையில் தங்கக்கவசம், வைரவேல் அணிந்து ராஜ கம்பீரத்துடன் காட்சி தருகிறார். இத்தரிசனத்தை காண்பவர்கள் ராஜவாழ்வு பெற்று மகிழ்வர். சுவாமி மலை திருப்புகழில் இதனை அருணகிரிநாதர், ராஜத லக்ஷ்ண லக்ஷúமி பெற்றருள் பெருமாளே என்று போற்றுகிறார்.