முருகப்பெருமான் ஓம் என்னும் மந்திரத்திற்கு பொருள் உரைத்ததாக ஒரு கதை உண்டு. இந்த நிகழ்ச்சியை ஒட்டியே, ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை அமைந்தது. இதற்கு ஆதாரமான நூல் கந்தபுராணம். திருச்செந்தூர் தல வரலாறு சார்ந்த நூல் ஒன்றில், சிவபெருமானே முருகனிடம் உபதேசம் பெற ஒரு சமயம் உத்தேசித்ததாகவும், அதனால் தான் அவரது எண்ணப்படியே இந்த நிகழ்ச்சி பிற்காலத்தில் நடந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. படிப்புக்கு வயது தடையல்ல. படித்த ஒருவர் வயதில் சிறியவராயினும், பெரியவர்கள் தங்களுக்கு தெரியாததை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்பதும் இதில் பொதிந்துள்ள நல்ல கருத்து. இவ்வகையில் முருகனை சின்ன வாத்தியார் என்று சொல்வது பொருத்தம்.