கோகர்ணம் என்றால் பசுவின் காது. சிவனை பசு பூஜித்த தலம் திருக்கோகர்ணம். அந்தப்பசு தன் காதை கங்கை நீரில் நனைத்து, அதை உதறியபடியே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ததாம். கோகர்ணம் தல வரலாறு இப்படி கூறுகிறது. கோகர்ணம் கோகர்ணேஸ்வரர் கோயில் கர்நாடகத்தில் உள்ளது. தமிழகத்தில், புதுக்கோட்டையில் உள்ள மிகப்பெரிய சிவாலயத்தையும் திருக்கோகர்ணம் என்கின்றனர்.