Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... ஸ்ரீசாய்ராம் அமைப்பினர் குரு பூர்ணிமா வழிபாடு ஸ்ரீசாய்ராம் அமைப்பினர் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல்; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல்; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2025
05:07

சிவகங்கை; சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை தரிசித்தனர். ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில், ஜூலை 4 ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா துவங்கியது. அன்று மாலை பக்தர்கள் கோயில் முன் பூக்குழி இறங்கியும், பூக்கரகம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பூச்சொரிதல் விழாவில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஜூலை 9 ம் தேதி ஏகதின லட்சார்ச்சனையும், அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. எட்டாம் நாளான நேற்று காலை அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. அம்மன் இன்று முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் கையில் குழந்தையுடன் எழுந்தருளினார். இன்று மாலை முதல் இரவு வரை ஏராளமான பெண்கள் பல்வேறு கோயில்களில் இருந்து பூத்தட்டுக்களை ஏந்தி ஊர்வலமாக பிள்ளைவயல் காளியம்மன் கோயிலுக்கு வந்தனர். அலங்காரத்தில் இருந்த அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காளியம்மனை தரிசனம் செய்தனர். கூடுதல் எஸ்.பி., சுகுமார், டி.எஸ்.பி.,க்கள் சிவகங்கை அமலஅட்வின், புருேஷாத்தமன், ஞானராஜ் ஆகியோர் தலைமையில் 400 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar