பதிவு செய்த நாள்
02
ஜூலை
2013
11:07
திருக்கனூர்: திருவக்கரை, சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், மழை வேண்டி வருண யாகம் நேற்று நடந்தது. திருவக்கரையில் சந்திர மவுலீஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு யாகம் நேற்று நடந்தது. அதனையொட்டி, காலை 9:15 மணிக்கு ருத்ர ஹோமம், ருத்ர ஜபம் நடந்தது. காலை 9:45 மணிக்கு மழை வேண்டி வருண சூக்த பாராயணம், வருண காயத்திரி ஹோமம், ஏகாதச ருத்ர ஜபம் நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம், பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. செயல் அலுவலர் மேனகா, பிரகாஷ், ஆய்வாளர் சுரேஷ், மேலாளர் ரவி, திருவக்கரை ஊராட்சி தலைவர் வேணு, பரமேஸ்வரன் குருக்கள், சேகர் குருக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.