காரைக்கால்: காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் அந்தோணியார் கொடிக்கு ஆலய பங்கு குருக்கள் அந்தோணி லூர்துராஜ், அந்தோணிராஜ், விக்டர் இமானுவேல் ஆகியோர் பூஜை செய்தனர். பின், சிறிய தேர்பவனியுடன் கொடி ஆலயத்தைச் சுற்றி வந்து ஏற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. வரும் 9ம் தேதி பெருவிழா திருப்பலியும், மின் அலங்கார தேர்பவனியும், தேவநற்கருணை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு குருக்கள் தலைமையில், புனித அந்தோனியார் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் மக்கள் செய்திருந்தனர்.