பதிவு செய்த நாள்
02
ஜூலை
2013
11:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று மசழை வேண்டி கோவில் குளத்தில், சிவாச்சாரியார்கள் வருண ஜெபம் நடத்தினர். தமிழகத்தில், பருவ மழை பொய்த்து விட்டதால், பல்வேறு ஜீவராசிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அனைத்து கோவில்களிலும், மழைவேண்டி யாகம் நடத்துவதற்கு கடந்த மாதம் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த, உத்தரவை ஏற்று, நேற்று காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் குளத்தில், காலை 9:10 மணி அளவில், "மழை வேண்டி பதிகப்பாடல் கோவில் குளத்தில், சிவாச்சாரியார்கள் முன்னிலையில் மந்திரங்கள் ஓதப்பட்டன. தொடர்ந்து, வருண ஜெப ஹோமம் நடந்தது. இதற்கான, ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.