திருத்தணி: மழை வேண்டி, ஷீரடி சாய்பாபா கோவிலில், சிறப்பு ஹோமம் மற்றும் யாகம் நடத்தப்பட்டது. திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை சாய்நகரில் அமைந்துள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலில் நேற்று மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் சாலை, ஐந்து கலசங்கள் அமைத்து வருண பகவானுக்கு, சிறப்பு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அரிகதா மற்றும் அகண்ட பஜனையும் நடத்தப்பட்டது.