பதிவு செய்த நாள்
02
ஜூலை
2013
11:07
பவானி: பவானி மற்றும் சென்னிமலை கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது.ஈரோடு மாவட்டத்தில் மிக பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றான, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், காசிக்கு அடுத்த சிறப்புடைய ஸ்தலமாகும்.அறநிலையதுறை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இக்கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. காலை, 6 மணிக்கு வருணஜபம், ருத்ரபாராயணம், ருத்ர ஹோமம் நடந்தது.காலை, 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கோவில் முன் உள்ள நந்திபெருமானுக்கு தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை நடந்தது.ஞானமணி குருக்கள், பாலாஜிசிவம், மணி குருக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். சென்னிமலை: சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது.சென்னிமலை ஸ்ரீசுப்ரமணியசுவாமி கோவில், அறநிலையத்துறை நிர்வாகம் சார்பில் இயங்கும் கோவிலாகும். இக்கோவில் கட்டுப்பாட்டில் உள்ள, டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலிலும், மழை வேண்டி யாக வேள்வி நிகழ்ச்சி நடந்தது. கோவில் செயல் அலுவலர் பசவராஜன் தலைமை வகித்தார். கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீராமநாதசிவம் தலைமையில், சிவாச்சாரியார், 17 பேர் வேதமந்திரங்கள் ஓத, யாகவேள்வி நடந்தது.மாவட்ட கவுன்சிலர் கோபாலகிருஷணன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை தலைமை எழுத்தர் ராஜீ தலைமையில், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.