திருநெல்வேலி: நெல்லை டவுன் அம்மா பூமாதேவி நிலையத்தில் காட்சி திருநாள் கோலாகலமாக நடந்தது.நெல்லை டவுன் கல்லத்தி தெருவில் உள்ள அம்மா பூமாதேவி நிலையத்தில் காட்சி திருநாளின் முதல் நாளான்று இரவு கல்லத்திதெரு ஆதிமூல பதியிலிருந்து எடுத்து வரப்பட்ட தீபஜோதி அம்மா பூமாதேவி நிலையத்தை வந்தடைந்தவுடன் தீபாராதனை நடந்தது. 2ம் நாளான்று காலை குருவழிபாடு, மலர் அர்ச்சனை பூஜை மற்றும் மதியம் தீபாராதனை நடந்தது. மாலையில் பக்தர்கள் அம்மா பூமாதேவி நிலையத்திலிருந்து பால்குடம் எடுத்து வீதி உலாவும், இரவு உண்பான் படைத்து, போதிப்பு நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் 3ம் நாள் காலை அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் விஷேச தீபாராதனை நடந்தது. பின் குருநாதர், அம்மா, அய்யா, மகராஜா ஆகியோர் அருளாட்சி நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.