பதிவு செய்த நாள்
05
ஜூலை
2013
11:07
திருநெல்வேலி: நெல்லை ஜங்ஷன் வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நெல்லை ஜங்ஷன் வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்துவருகிறது. இதற்கிடையே பிரமோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பிரமோற்சவ திருவிழா நாட்களில் தினந்தோறும் ஹோமம், திருமஞ்சனம், சுவாமி வாகனங்களில் எழுந்தருளல் வைபவம் நடக்கிறது. அன்ன பட்சி வாகனம், சிங்க வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், புன்னை மரம் வாகனம், இந்திர விமானம், குதிரை வாகனம், வெள்ளி பல்லக்கு, தவழந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளல், தீர்த்தவாரி உற்சவம், புஷ்ப பல்லக்கு வாகனங்களில் பிரமோற்சவ நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளல் வைபவம் நடக்கிறது. திருவிழா நாட்களில் சிறப்பு அலங்கார பூஜைகளுக்கும், தீபாராதனைகளும் நடக்கிறது.