நாகபூண்டி: ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள கோவிலில், அக்னி வசந்த திருவிழா நடந்து வருகிறது. ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த பெரிய நாகபூண்டி கிராமத்தில், அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோவில். இங்கு அக்னி வசந்த திருவிழா, கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருப்பதி லட்சுமிகுமாரியின் மகாபாரத பாகவதம் (தெலுங்கு) தினசரி மதியம் நடந்து வருகிறது. இரவு கோவில் முன்பாக, மகாபாரத நிகழ்வுகள், தெருக்கூத்து நிகழ்ச்சியாக நடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் இரவு பகடை சூது நடந்தது. வரும், 10ம் தேதி, துரியோதன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெறஉள்ளது. 11ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.