பதிவு செய்த நாள்
08
ஜூலை
2013
10:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் பகுதியில், அக்னி தீர்த்த கடலுக்குச் செல்லும் பாதையில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவிலில், பக்தர்களிடம், திருடர்கள் கைவரிசை காட்டுகின்றனர். விழா காலங்களில், பக்தர்கள் போர்வையில் ஊடுருவி, நாச செயலில் ஈடுபடும், சதிக் கும்பலைக் கண்காணிக்க, கோவில் கிழக்கு வாசல் முன், அக்னி தீர்த்த கடலுக்குச் செல்லும் சாலையில், நவீன சுழல் கேமராவை, போலீசார் பொருத்தியுள்ளனர். இதன் கட்டுப்பாடு அறை, கோவில் போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.