பதிவு செய்த நாள்
10
ஜூலை
2013
10:07
பழநி: பழநியில் ரோப்கார் பழுதுகாரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பக்தர்கள் "வின்ச் ஸ்டேசனில் 2 மணிநேரம் காத்திருந்து, மலைக்கோயிலுக்கு செல்கின்றனர். பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை வழியாக மட்டுமே சென்றுவந்தனர். வயதானவர்கள், குழந்தைகள் மலையேற சிரமப்பட்டனர். அவர்களின் வசதிக்காகவும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், வின்ச்,ரோப்கார் அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 5ல் "ரோப்கார் மேல்தளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, நிறுத்தப்பட்டு ஒரு மாதமாகிறது. தற்போது பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்லுவதற்கு "வின்ச் மட்டுமே உள்ளது. "வின்ச் ஸ்டேசனில் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை, காத்திருந்து மலைகோயிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர். காலை 5.00 மணி முதல் இரவு 10 மணி வரை மூன்று "வின்ச்களும் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கிறது. பக்தர்களின் வசதிக்காக, எப்போதும் இல்லாத வகையில் "மூன்று வின்ச் களும், ஒரே நேரத்தில் இயங்குகிறது. "ரோப்கார் பராமரிப்பு பணியை விரைவில் முடித்து, அதனை இயக்க தேவஸ்தானம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.