பதிவு செய்த நாள்
10
ஜூலை
2013
11:07
கோவளம்: கோவளம், ஏகவல்லி அம்மன் கோவிலுக்கு, முழுமையாக சுற்றுச் சுவர் அமைத்து, பாதுகாக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவளத்தில், பழமை வாய்ந்த ஏகவல்லி அம்மன் கோவில், அறநிலையத் துறை கட்டுபாட்டில் உள்ளது. இக்கோவிலில், அமாவாசை, பவுர்ணமி, நவராத்திரி விழா மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இங்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து, அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இக்கோவிலின் ஒரு புறத்தில், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் சுற்றுச் சுவர் இல்லாமல், திறந்தவெளியாக உள்ளது. இதை பயன்படுத்தி, அங்குள்ள சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பக்தர்களின் நலன் கருதி, கோவில் வளாகம் முழுவதும் முறையாக சுற்றுச் சுவர் அமைத்து பாதுகாக்க, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.