பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
10:07
சேலம்: சேலத்தில், நேற்று யோகிராம் சுரத்குமார் நாமகேந்திரா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.சேலம் அழகாபுரம், பெரியபுதூர் குமரன் நகர், அருணகிரி வித்யாலயா பள்ளி வளாகத்தில், யோகிராம் சுரத்குமார் நாமகேந்திரா உள்ளது. நேற்று காலை நாமகேந்திராவுக்கு, மகா கும்பாபிஷேக விழா நடந்தது.காலை கணபதி ஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹுதி ஆகியவை நடத்தப்பட்டது. பிறகு, நாமகேந்திரா விமானம், யோகிராம் சுரத்குமார் சிலை, விநாயகர் சிலை, சிவலிங்கம், நாகதேவதை ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை, அருணகிரி வித்யாலயா பள்ளி தாளாளர் குமரவேல், யோகிராம் சுரத்குமார் நாமகேந்திரா பகவான் அறக்கட்டளை தலைவர் கருணாகரன், செயலாளர் குலசேகரன், பொருளாளர் சகாதேவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.