பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மழைவேண்டிய வருணபகவான் சிறப்பு வருண ஐபஹோம அபிழேக விழா நேற்று நடந்தது.பெரம்பலூர் தர்மபரிபாலன சங்கம் சார்பில் புரம்மபுரீஸ்வரர் நந்திகேஸ்வர பகவானுக்கு அபிஷேக ஆரதானைகள் கலசதீர்த்தங்கள் அபிஷேகம் நடந்தன. நிகழ்ச்சியில் நேற்று காலை 9 மணிக்கு பூஜை துவங்கியது.இதைத்தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்யாஹம், கலச ஆவாஹம், வருணஜபம், வருண மந்திர ஹோமங்கள், பூர்ணாஹீதி, தீபாராதனை, கலசதீர்த்தம் அபிஷேகம் , மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் சிறப்பு அபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.