பதிவு செய்த நாள்
17
ஜூலை
2013
11:07
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த ஆழிவாயன்கொட்டாய் ஓம்சக்தி பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில், 14ம் ஆண்டு பால் குடவிழா மற்றும் அலகு குத்துதல், தீச்சட்டி விழா இன்று (ஜூலை17) நடக்கிறது.இதையொட்டி, கடந்த, 10ம் தேதி தீச்சட்டி எடுக்கும் பக்தர்களுக்கு கங்கணம் கட்டப்பட்டது. நேற்று (ஜூலை16) மாலை, 6 மணி முதல், 8 மணி வரை குத்துவிளக்கு பூஜை நடந்தது.தொடர்ந்து இரவு, 8.30 மணிக்கு எரிகண்டன் எமகண்டன் நாடகமும், 10 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இன்று காலை, 10.30 மணி முதல், 11.30 மணி வரை அனுமந்தபுரம் முதல் பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் வரை பால் குடம், தீச்சட்டி ஊர்வலம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் செல்கின்றனர். மதியம், 1 மணி முதல் மாலை, 5 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.