சித்தலூர் கோவிலில் அடிப்படை வசதிகளின்றி பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2013 10:07
தியாகதுருகம்: சித்தலூர் கோவிலுக்கு ஆடிமாத சிறப்பு பூஜைக்காக வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் மணிமுக்தா ஆற்றின் கரையோரம் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இங்கு போதிய கழிவறை, குடிநீர் வசதி செய்து தரவில்லை. கடந்த மாசி மாதம் நடந்த திரு விழாவின் போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் இரு இடங்களில் கைப் பம்பு வசதி செய்து தரப்பட்டது. இருப்பினும் பக்தர்களுக்கு போதுமானதாக இல்லை. கழிப்பறை வசதி இன்றி பெண்கள் கடும் சிரமப்படுகின்றனர். ஏற்கனவே இருந்த கழிவறை பராமரிப்பின்றி சேத மடைந்தது. ஆடி மாதத்தில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். போதிய கழிவறை , குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.