கோவிலுக்கு மேற்கில் ஒரு காலத்தில் ஓடிய அக்னி மாநதியில், பெருமழை காரணமாக ஒரு நாள் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில், ஆங்கிலேய அதிகாரி ஒருவர் சிக்கி தத்தளித்துள்ளார். உயிர் தப்பிக்கும் முயற்சியாக, வெள்ள நீரில் தற்காத்துக்கொள்ள, அங்கிருந்த பிள்ளையார் சிலையை பிடித்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. அதனால், அவ்விநாயகர், "ஆபத்து காத்த விநாயகர் என்றழைக்கப்படுகிறார். சோழீஸ்வரர் கோவிலுக்கு மேற்கே சில அடி தூரத்தில், அக்னிமா நதி ஓடிய இடத்தில் (செக் டேம் அருகில்) விநாயகருக்கு தனிக்கோவில் உள்ளது. தன்னை காப்பாற்றிய விநாயகர் கோவில் மற்றும் சோழீஸ்வரர் கோவில்களுக்கான பூஜை செலவுக்கு, தினமும் இரண்டு ரூபாய் வழங்க அந்த அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதற்கான உத்தரவு எண்: 3136 /பி.ப்பி., ஜி.ஓ., எண்: 1625 / நாள்: 25.11.1899 என்ற கடிதம் உள்ளதாக, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கணேசன் தெரிவித்தார்.