கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தொழில் சிறப்பாக அமைந்து லாபம் பெருக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரரை நினைத்து இந்தப் பதிகத்தைப் பாடுங்கள்.
மட்டிட்ட புன்னையம் கானல் மடமயிலைக்கட்டிட்டம் கொண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்குஅட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்....மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான்ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்....வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்தளத்துஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.....ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலைக்கூர்தரு வேல்வல்லார் கொற்றம்கொள் சேரிதனில்கார்தரு சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.....மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்கைப்பூச நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்.....மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்கடல் ஆட்டுக் கண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான்அடல் ஆனேறு ஊரும் அடிகள் அடிபரவிநடம்ஆடல் காணாதே போதியோ பூம்பாவாய்.....மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திரநாள்ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்....தண்ணா அரக்கன்தோள் சாய்த்துகந்த தாளினான்கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.....நல்தா மரைமலர்மேல் நான்முகனும் நாரணனும்முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி திருவடியைக்கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம் அமர்ந்தான்பொன்தாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.....உரிஞ்சு ஆயவாழ்க்கை அமண் உடையைப் போர்க்கும்இரும் சாக்கியர்ள் எடுத்து உரைப்ப நாட்டில்கரும்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்பெரும்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.....கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும் வல்லார்வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.