நெல்லையப்பர் கோயிலில் பவித்ர உற்சவம்: பஞ்சமூர்த்திகள் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2013 10:07
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் நேற்று பவித்ர உற்சவத்தை முன்னிட்டு நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் சிறு,சிறு குறைபாடுகள், தவறுகள் நடந்திருந்தால், அதனை நிவர்த்தி செய்ய பவித்ர உற்சவம் நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான பவித்ர உற்சவம் நெல்லையப்பர் கோயிலில் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு ஹோமம், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.இதனையடுத்து உலக நன்மைக்காக அனைத்து மூலவர்கள், உற்சவமூர்த்திகளுக்கு பூணூல் மாற்றும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர்.பஞ்சமூர்த்தி வீதி உலாநேற்று இரவு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி முஞ்சிறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் டவுன் நான்கு ரதவீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.