பதிவு செய்த நாள்
22
ஜூலை
2013
10:07
பேய்க்குளம்: ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று நடக்கிறது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவிற்குட்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று நடக்கிறது. ஆடித்தபசு திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்களாக குருகால்பேரி, பெருமாள்குளம், சாலைப்புதூர், இளமால்குளம், விராக்குளம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், பழனியப்பபுரம், கோமாநேரி, சங்கரநயினார்புரம் ஆகிய சுற்றுவட்டார கிராம மக்கள் சார்பாக தினமும் சிறப்பு வழிபாடு, சுவாமி அம்பாள் எழுந்தருளல், பூஜைகள், பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இன்று இரவு திருவிழாவின் சிறப்பு அம்சமாக ஆடித்தபசு காட்சி நடக்கிறது. 11ம் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு அம்பாள் தபசுக்கு புறப்படுதல், 12 மணிக்கு அலங்கார பூஜை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சுவாமி தபசு மண்டபம் புறப்படுதல், 7 மணிக்கு அம்பாளை அழைத்து வருதல், 7.30 மணிக்கு சந்தியில் காட்சி கொடுத்தல் நடக்கிறது. பின்னர் இரவு 8 மணிக்கு தபசு காட்சி நடக்கிறது. 8.30 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி, 11.30 மணிக்கு திருக்கல்யாணம், 12.30 மணிக்கு சுவாமி அம்பாள் வீதி வலம் வருதல் ஆகியவை நடக்கிறது. ஆடித்தபசு திருவிழா ஏற்பாடுகளை ஸ்ரீசங்கரலிங்க சுவாமி அறக்கட்டளையினர் செய்து வருகிறார்கள்.