ராமநாதபுரம்: அத்தியூத்து உதிரமுடைய அய்யனார் பகவதி அம்மன் கோயிலில், ஆடி மாத உற்சவ சிறப்பு பூஜை நடந்தது. சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அழகன்குளம் அழகிய நாயகி மகளிர் மன்ற பொறுப்பாளர் பிரேமா தலைமையில், லலிதா சகஸ்ரநா அர்ச்சனை, குங்கும, மாங்கல்ய பூஜை நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக தலைவர் கருணாநிதி மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.