கும்பகோணம்: கும்பகோணம் அருகே சூரியனார்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியபெருமான்கோவில் உள்ளது.தமிழகத்தில் நவக்கிரகங்களுக்கு என்றே அமைந்துள்ள சிறப்பு பெற்ற தலம். இங்கு சூரியபெருமானுக்கு ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிறு காலை சிறப்பு ஹோமத்துடன் மகாபிஷேகம் நடப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் ஆடி மாத முதல் ஞாயிறு என்பதால் மகாபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு சிறப்பு ஹோமமும், உற்சவர் உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதன்பின் கடங்கள் எடுத்து வரப்பட்டு மகாபிஷேகமும், தொடர்ந்து புஷ்பலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது.மகாபிஷேகத்தில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை சுப்ரமணியத் தம்பிரான் சுவாமிகள் கலந்துகொண்டு முன்னிலை வகித்தார். மகாபிஷேகத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.