திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் தேரடி விநாயகருக்கு 28ம் ஆண்டு சந்தனகாப்பு விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 20ம் தேதி மாலை கலச ஸ்தாபனம், ஹோமங்கள் நடந்தது. மூலவர் விநாயக பெருமான் காய்கனி அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று காலை சிறப்பு அபிஷேகம், உற்சவமூர்த்திக்கு கலசாபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் சோடசேபசார தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட விநாயகர், சிறப்பு நாதஸ்வர தவுல் இசை கச்சேரியுடன் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேரடி விநாயகர் இளைஞர் குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.