பண்பொழி கோயிலில் தங்கத் தேரில்செப்பு தகடுகள் பொறுத்தும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2013 10:07
கடையநல்லூர்: பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் தங்கத்தேரில் செப்புத்தகடுகள் பொறுத்தும் பணி நேற்று துவங்கியது. வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தேரில் தங்கம் பதிக்கும் பணி நடக்கவுள்ளது.கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் உபயதாரர்கள் மூலமாக தங்கத் தேர் அமைக்கும் பணியும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கோயில் வளாகத்தில் தேர் ஓடுவதற்காக ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே தங்க தேருக்கான மரத்தேர் தயார் நிலையில் இருந்து வரும் நிலையில் தங்கத் தேரை நிறுத்துவதற்கான இடமும் சுமார் 10லட்சம் செலவில் கட்டப்பட்டு அதற்கான பணிகளும் முடிவு பெற்றுள்ளது.இரண்டு கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று காலை தங்கத்தேருக்காக தயாரிக்கப்பட்டுள்ள மரத்தேரில் செப்புத்தகடுகள் பதிப்பதற்கான பணிகள் துவங்கியது. கோயில் உதவி ஆணையர் கார்த்தி, முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம் ஆகியோர் முன்னிலையில் இதற்கான பணிகள் பூஜைகளுடன் துவங்கியது. நிகழ்ச்சியில் கிருஷ்ணாபுரம் ரவிச்சந்திரராஜா, பரமேஸ்வரி அருணாசலம், தென்காசி கிட்டுபிள்ளை, ஆறுமுகம், கொடிக்குறிச்சி பரமசிவன் மற்றும் கோயில் பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.இப்பணிகள் குறித்து தங்கத் தேர் கமிட்டி தலைவரும், முன்னாள் திருப்பணிக்குழு தலைவருமான அருணாசலம் கூறுகையில்:-பக்தர்களின் எதிர்பார்ப்பினை தொடர்ந்து பண்பொழி கோயில் தங்கத் தேர் விரைவில் ஓடுவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தேரை நிறுத்தும் இடம் கட்டுமான பணி முடிந்துள்ள நிலையில் ஓடுதள பணிகளும் பெருமளவில் முடிவுற்று வருகிறது. இதனையடுத்து தற்போது மரத்தேரில் செப்புத்தகடுகள் பதிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பணியாக ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தேரில் தங்கம் சேர்க்கும் பணி துவங்கப்படுமென தெரிவித்தாõர்.தென்மாவட்ட பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ள பண்பொழி கோயில் தங்கதேர் ஓடுவதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து முருக பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.