Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரகாண்டம் பகுதி-24 சுந்தரகாண்டம் பகுதி-26 சுந்தரகாண்டம் பகுதி-26
முதல் பக்கம் » சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம் பகுதி-25
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 மார்
2011
03:03

அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி.அக்னி சுடவில்லை என்றால் அது ராமனின் கிருபையினாலேயே நடக்கிறது. சீதாதேவியின் பிரார்த்தனையால் இது நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். மேலும் அக்னியும், என் தந்தை வாயுவும் நண்பர்கள். அந்த அடிப்படையிலும் இது நிகழலாம் என பல்வேறு விதமாக சிந்தித்தபடி, அவர் திடீரென சீறிப்பாய்ந்தார். தன் உடலை பெரியதும் சிறியதுமாகச் செய்து கட்டுக்களை அவிழ்த்தார். உலக்கை போன்ற கைகளை குச்சி போல மாற்றி விட்டால், கட்டுகள் அவிழ்ந்து விடும் தானே! அந்த முறையில் கட்டுக்களை உதறிவிட்டு, உயரமான ஒரு இடத்தில் ஏறி நின்றார். சீதையைக் கண்டுபிடித்தாயிற்று, ராமன் கொடுத்தனுப்பிய கணையாழியைக் கொடுத்து அவரது நிலையைச் சொல்லியாயிற்று, ராட்சஷர்களின் பலத்தை பரிசோதித்து பார்த்தாயிற்று, ராவணனையும் சந்தித்து அவனது மனநிலையையும் தெரிந்தாயிற்று, இலங்கையை சுற்றிப்பார்த்து நகர அமைப்பை தெரிந்து கொண்டாயிற்று... இனி வேலை ஏதுமில்லை. போருக்கு வரும் முன் இங்குள்ள கோட்டையையும், தடுப்பு அரண்களையும் அழித்து விட்டால் பின்னால் வசதியாக இருக்கும் என்று எண்ணியவராய், அக்னி தனக்குச் செய்த சகாயத்தைப் பயன்படுத்தி கோட்டையில் தீ வைத்தார். ராட்சஷர்களின் வீடுகளிலும், மாளிகை, தோட்டங்கள் எல்லாவற்றிலும் நெருப்பை பற்ற வைக்க இலங்கையே எரிய ஆரம்பித்தது. கும்பகர்ணன், இந்திரஜித் உள்ளிட்டவர்களின் வீடுகளுக்கும் தீ வைத்தார். விபீஷணனின் வீட்டை மட்டும் விட்டுவிட்டார். எல்லாவற்றிற்கும் உச்சமாக ராவணனின் மாளிகைக்கே தீ வைத்து விட்டார். தேவர்களையெல்லாம் அவமானப்படுத்தி வந்த ராவணனின் வீட்டில் தீ வைக்கப்பட்டதோ இல்லையோ, தேவனான அக்னி பகவானுக்கு மிகுந்த கொண்டாட்டமாகி விட்டது. தன் பணியை மிகச்சிறப்பாக செய்ய ஆரம்பித்து விட்டார். அதிபயங்கரமாக கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தார்.ராட்சஷர்கள் தங்களுக்கு ஏதோ கேடு காலம் இந்த குரங்கின் ரூபத்தில் வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள். வீடுகளில் இருந்த ராட்சஷக்குழந்தைகள் அலறின.

அவர்களை தூக்கிக் கொண்டு, ராட்சஷ தாய்மார்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பல ராட்சஷர்கள் தீயில் சிக்கி மரணமடைந்தனர். ஆனாலும், மாருதிக்கு திருப்தி ஏற்படவில்லை. இந்த சேதம் போதாதென்றே நினைத்தார். இலங்கை முழுவதையும் எரித்தாக வேண்டும் என்பது அவரது எண்ணம்.எனவே பர்வதசிகரம் எனப்படும் திரிகூடமலையில் ஏறி தீ வைத்தார். அங்கிருந்த ராட்சஷர்களின் வீடுகள் பற்றி எரிந்தன. ராட்சஷர்கள் மிகப்பெரிய உடலை உடையவர்கள் என்பதால் அவர்களது உடல் வெடித்துச் சிதறி நெருப்புத்துண்டங்களாகி தீயை மேலும் பெருக்கியது.இந்த நேரத்தில் ஒன்றைச் சிந்திக்க வேண்டும்.ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி பிரிவினை ஏற்படுவது சகஜம். இதை குடும்பத்திலுள்ள பெரியவர்கள் தீர்த்து வைக்க முன்வர வேண்டும். பதிலாக, பிரச்னையை ஊதிப் பெரிதாக்கினால், அந்தப் பெண்ணின் வயிற்றெரிச்சல், இலங்கையைப் போல, துன்பம் செய்தவர்களின் குடும்பத்தையே அழித்து விடும். பொன்மான் மீது கொண்ட ஆசையால், இரண்டு கொழுந்தன்மாரை சந்தேகப்பட்டாள் சீதா. ஒன்று லட்சுமணன். இன்னொருவன் பரதன்.ஓஹோ! அந்த பரதன் ஒருவேளை என் மீது ஆசைப்பட்டு, உன் மூலமாக என்னை அபகரிக்க திட்டம் போட்டிருக்கிறானோ! அதனால் தான் உன் சகோதரர் காட்டில் ராட்சஷர்களிடையே மாட்டி, சீதா...லட்சுமணா என்று அபயக்குரல் கொடுத்தும் நீ செல்ல மறுக்கிறாயோ, என்று லட்சுமணனிடம் கேட்டாள் சீதா. இந்த சொல் நெருப்பாய் அவன் உள்ளத்தைச் சுட்டது. அம்புகளாய் பாய்ந்தது. ஆனாலும், பொறுமையுடன், தாயே! எனது சகோதரர் சாதாரணமான வீரர் அல்ல. எந்தச் சூழலிலும், அவருக்கு என்ன துன்பம் வந்தாலும், பிறர் உதவியை அவர் நாடவே மாட்டார். தன் பிரச்னையை தானே தீர்த்துக் கொள்ளும் சூராதி சூரர் அவர். அவருக்காவது ஆபத்தாவது... எல்லாம் அந்த மாரீசனின் மாயச்செயல், தாங்கள் கலங்காதீர்கள், நான் அண்ணனின் கட்டளையை மீறி இங்கிருந்து செல்லவே மாட்டேன்,  என்றான். ஆனாலும், மேற்கண்ட சொல்லம்பு அவனை அங்கிருந்து அகலும்படி செய்தது.

அவள் துன்பப்பட்டாள்.ஆனால், இந்த செய்கைகளுக்கெல்லாம் மூலகாரணம் யார்? ராவணன். அவன் ஒரு பெண்ணின் சாபத்தை சம்பாதித்தான்.பெண்களின் சாபம், அவளைப் பாதிப்புக்குள்ளாக்கியவரின் குடும்பத்தை மட்டுமல்ல! அவளைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களையும் அழித்து விடும். ராவணன் செய்த பாவம், அவன் தேசத்திலுள்ள மக்களையும் சேர்த்து எரிப்பதைப் போல! சுந்தரகாண்டம் படிக்கும் அன்பர்கள் தங்கள் மனைவியை எந்தக் காரணத்தால் பிரிந்திருந்தாலும் சரி...அதையெல்லாம் மறந்து விட்டு, ஒன்று சேர வேண்டும்.எப்படியோ, ஒட்டுமொத்தமாக இலங்கையை நாசமாக்கி விட்டார் மாருதி.தேவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். நம்மால் ஏறெடுத்தும் பார்க்க முடியாத லங்காபுரியை இவன் ஒருவனே நாசமாக்கி விட்டானே என்று! நாம் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றால், வாலில்  வெண்ணெய் பூசி வழிபடுகிறோம். அவரது வாலில் சூடுபட்டதால் வலிக்கும் என்ற அன்பின் காரணத்தால் செய்யப்படும் வழிபாடு அது. நிஜத்தில், அவருக்கு வலிக்கவில்லை. எந்த வால், சீதாபிராட்டியைக் காத்ததோ, அந்த வால் தங்களையும் காக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் வழிபாடே அது. அதனால் தான் வாலில் மணியைக் கட்டி அதை தெய்வாம்சமானதாகவும் கருதுகிறோம்.இலங்கை பற்றி எரிந்த பிறகு தான், மாருதிக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. பகீர் என மனதை வாட்டியது அந்த நினைவு. ஒருவேளை அப்படி நடந்திருந்தால், ராமபிரானுக்கு என்ன பதில் சொல்வது!  அவசரப்பட்டு விட்டோமே என கலங்கினார் அவர். அந்தக் கலக்கத்துக்கு என்ன காரணம்?

 
மேலும் சுந்தரகாண்டம் »
temple news
தேவி! ஸ்ரீமன் நாராயணன், ராமாவதாரம் எடுக்கப் போகிறார். ராமசேவைக்கு நம்மாலானதையும் செய்ய வேண்டும். ... மேலும்
 
temple news
எல்லோருமாக பிரம்மாவை அணுகி தங்கள் சிரமத்தைச் சொல்ல, அவர் வாயுவை சமாதானப்படுத்தும்படி ... மேலும்
 
temple news
வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில், ஆயிரத்துக்கு ஒரு எழுத்து வீதம் ... மேலும்
 
temple news
ஆஞ்சநேயர் விண்ணில் பறக்க ஆரம்பித்தார். வாயுவின் வேகம் மனதின் வேகத்தைப் போன்றதல்லவா! அவரது மனமும் ... மேலும்
 
temple news
தீமையை வேகமாகச் செய்து முடித்து விடலாம். ஆனால், நல்ல காரியங்கள் செய்வது கஷ்டமான விஷயம். அதில் பல தடைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar