Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரகாண்டம் பகுதி-3 சுந்தரகாண்டம் பகுதி-5 சுந்தரகாண்டம் பகுதி-5
முதல் பக்கம் » சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம் பகுதி-4
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜன
2011
03:01

ஆஞ்சநேயர் விண்ணில் பறக்க ஆரம்பித்தார். வாயுவின் வேகம் மனதின் வேகத்தைப் போன்றதல்லவா! அவரது மனமும் அல்லவா இப்போது வேகம் கொண்டிருக்கிறது. சீதாவைக் காண்போமா! அவளை ராமபிரானிடம் ஒப்படைப்போமா! ஒருவேளை இலங்கையில் சீதா இல்லையென் றால், ராமன் உயிர் தரிக்கமாட்டாரே! அந்தச்சூழலில் சுக்ரீவன் இறந்து விடுவான், லட்சுமணன் இறந்து போவான், இதைக் கேள்விப்படும் பரத, சத்ருக்கனர் மடிவர், அயோத்தி மக்களில் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள். வானர வீரர்கள் தங்களை மாய்த்துக் கொள்வர். என் ஒருவனின் பாருட்டு, இத்தனை பேர் அழிவரா! ஸ்ரீராமா! நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்.நிச்சயமாக நீயும் காப்பாற்றப்படுவாய்! நானும் காப்பாற்றப்படுவேன். ஏனெனில், நான் ராமநாமத்தை உச்சரிப்பவன்.இப்படி அவன் பறந்த வேளையில், சீதாவிடம் தான் ராமதூதன் என்பதை நிரூபிக்க, ராமபிரான் சொன்ன ஒரு சம்பவம் அவன் நெஞ்சிலே நிழலாடியது. அதை நினைத்தபடியே அவன் வேகமாகப் பறக்கிறான். அந்த சம்பவம் என்ன? கருணையில் ராமன் உயர்ந்தவனா? சீதா சிறந்தவளா? என்று ஒரு போட்டி வைத்தால், நம் பிராட்டியே வெற்றி பெறுவாள். ராமனையும் விட கருணையா? அவனே கருணாமூர்த்தியாயிற்றே! உலகிலுள்ள ரிஷிகளெல்லாம் தன்னைத் தரிசிக்க வேண்டுமென்பதற்காக, காட்டிற்கு போகக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டவன் ஆயிற்றே! அவனது கண்களில் கருணை சிந்துமாமே! ராமபிரான் குழந்தையாக இருந்த போது, அவரை அடிக்கடி அழைத்துப் பார்ப்பாராம் தசரத மகாராஜா. ஏன் தெரியுமா? கருணை பொங்கும் அவரது கண்ணழகை ரசிக்க...சிறிது நேரம் பார்த்து விட்டு, திரும்பிப்போ என்பாராம்.

ராமனும் செல்வாராம். அப்போது பின்னழகை ரசிப்பாராம். இப்படி முன்னால் கண்ணழகு, பின்னால் நடையழகு என மாறி மாறிபகவானை அனுபவித்த பாக்கியசாலி அவர். அப்படிப்பட்ட கருணைக் கண்களுக்கு சொந்தக்காரரான ராமனை விட சீதா எந்த விதத்தில் உசத்தி?ஒருமுறை, ராமபிரான் சீதாவுடன் ஏகாந்தமாக (தனிமை) இருந்தார். மனைவியின் மடி மீது தலை வைத்து அஞ்சனவண்ணன் கண் மூடியிருக்கிறான். கணவரின் தூக்கம் கலைந்து விடக்கூடாதே என்று சீதா அசையவில்லை. இன்னொரு காரணம், அவன் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம். தூக்கத்தில் கூட இரண்டு வகையை சுந்தரகாண்டம் காட்டுகிறது. அனுமான் இலங்கை சென்ற பிறகு, ராவணனின் மாளிகையை நோட்டமிட்டார். அங்கே ராவணனால் கடத்தி வரப்பட்ட பெண்களும், இன்னும் ஆசைநாயகியரும் அவனது விருப்பத்தை நிறைவேற்றி விட்டு, படுத்திருந்த காட்சியைப் பார்த்து ஆஞ்சநேயன் தலை குனிந்து, இதையெல்லாம் பார்க்க என்ன பாவம் செய்தோமே! என்று கலங்கினான். அதே நேரம் ராவணின் தர்மபத்தினியான மண்டோதரி துயில்வதைப் பார்த்து, இவள் சீதையோ என்று சந்தேகமும் கொண்டானாம். அப்படி ஒரு அடக்கமான பெண்மணி மண்டோதரி. ராவணனுக்கு வாழ்க்கைப்பட்டதைத் தவிர வேறெந்த பாவமும் செய்யாத பெண்மணி அவள்.அதுபோல், இங்கே ராமன் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான். சீதா அவனது அழகைப் பருகிக் கொண்டிருக்கிறாள். அப்போது இந்திரனின் மகனான ஜெயந்தன் காக வடிவெடுத்து, அங்கே வந்தான். அவன் சீதையின் அழகை ஒரு மரத்தில் இருந்தபடி பருகிக் கொண்டிருந்தான். பிறன் மனை காண்பது கொடிய பாவமல்லவா? அவர்களுக்கு சொர்க்கமும் கிடைக்காது, நரகமும் கிடைக்காது. நரகம் போனால் கூட ஏதாவது ஒரு காலத்தில் விடிவு கிடைத்து விடும். அங்கும் போகாதவன் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பான். இங்கே இறந்த பிறகு, அங்கும் தினம் தினம் மரண பயத்தில் அலறியபடியே தொங்குவான். அப்படி ஒரு கொடிய பாவத்தை செய்து கொண்டிருந்தான் ஜெயந்தன். காக வடிவெடுத்ததால் அவனை காகாசுரன் என்றும் சொல்வார்கள். அந்தப் படுபாவி, நம் அன்புத்தாய் சீதாவின் மார்பைக் கொத்தினான். அன்னைக்கோ தர்ம சங்கடம். ரத்தம் வழிந்தது. ராமன் விழித்து விடக்கூடாது என்பதில் அந்நிலையிலும் அக்கறையாக இருந்தாள். ஆனால், ராமனின் கைகளால் தற்செயலாக வழிந்த ரத்தம் விழ, பிசுபிசுவென ஏதோ ஒட்டியதால் விழித்தெழுந்தார் ராமன். நிலைமையைப் புரிந்து கொண்டார்.

தான் படுத்திருந்த தர்ப்பை படுக்கையில் இருந்து ஒரு புல்லை எடுத்து வீசினார். அது பாணமாய் மாறி அவனை விரட்டியது. கர்வம் கொண்டவன் அல்லவா ஜெயந்தன். அந்த பாணத்தில் இருந்து தப்பி விடலாமென பல இடங்களுக்கும் பறந்தான். பாணம் விரட்டியது. தான் விபரீதத்தில் சிக்கிக் கொண்டோம் என்பது புரிந்து விட்டது. நம் வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டால் என்ன என்று தோன்றியது. ஒரு மானிடன் வீசிய அம்பு தேவலோகத்துக்கு எப்படி வரும்? எனவே, தேவலோகம் நோக்கிப் பறந்தான். பாணம் அங்கும் வந்து விரட்டியது. அவனுக்கு மரண பயம் வந்து விட்டது. அம்மா இந்திராணியிடம் ஓடினான். என்னடா தப்பு செய்தாய்? என அவள் அவனை அதட்டினாள். அவளிடம் நடந்ததைச் சொன்னான். அடப்பாவி! லோகத்திற்கே படியளக்கும் லட்சுமி பிராட்டி சீதாவாக பூமியில் அவதரித்துள்ளதை நீ அறிவாய். அறிந்தும் தவறு செய்தாய். உனக்கு மன்னிப்பே இல்லை. உனக்கு அடைக்கலம் அளித்தால், தேவலோகமே அழிந்து போகும். என் பிள்ளைப்பாசத்தின் பொருட்டு, ஆயிரக்கணக்கான தேவர்களை நான் இழக்கமாட்டேன். நீ சாக வேண்டியவன் தான்! பிறர் மனைவியைத் தொட்ட கயவனே! நீ என் பிள்ளையே அல்ல, ஒழிந்து போ, என சொல்லிவிட்டாள். காகாசுரன் பறந்தான்... பறந்தான்... பறந்தான்...  எங்கும் அவனுக்கு அடைக்கலம் தர நாதியில்லை. கடைசியில், ராமபிரானையே சரணடைவது என முடிவெடுத்தான். அவரது பாதங்களில் வந்து விழுந்தான்.ஸ்ரீராமா சரணம் சரணம்! நான் உம்மை அடைக்கலமடைந்தேன், நான் செய்த தவறுக்கு மன்னிப்பில்லை தான்! இருப்பினும், கருணைக்கடலான நீர் உயிர்பிச்சை இடுவீர் என நம்பி, உம்மை சரணடைந்தேன். என்னைக் காப்பாற்றுங்கள், என்று கதறினான். அப்போது காகமாக இருந்த அவனது தலை, ராமனின் பாதம் இருந்த திசைக்கு எதிர்திசையில் இருந்தது. கருணைக்கடலான சீதாபிராட்டி, அந்த காகத்தின் தலையை ராமனின் பாதம் பக்கமாக திருப்பி வைத்தாள். அவள் நினைத்தால் தலையைத் திருகியிருக்கலாம். ஆனால், லோகமாதாவான அந்த திருமகள், தனக்கு துன்பமிழைத்தவனுக்கும் இப்படி ஒரு கருணையைச் செய்தாள். எப்பேர்ப்பட்ட உத்தமி இந்த சீதா? அவளைக் காப்பாற்ற வேண்டாமா? என்று அவளின் கல்யாண குணங்களைச் சிந்தித்தபடியே பறந்தார் ஆஞ்சநேயர்.

 
மேலும் சுந்தரகாண்டம் »
temple news
தேவி! ஸ்ரீமன் நாராயணன், ராமாவதாரம் எடுக்கப் போகிறார். ராமசேவைக்கு நம்மாலானதையும் செய்ய வேண்டும். ... மேலும்
 
temple news
எல்லோருமாக பிரம்மாவை அணுகி தங்கள் சிரமத்தைச் சொல்ல, அவர் வாயுவை சமாதானப்படுத்தும்படி ... மேலும்
 
temple news
வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில், ஆயிரத்துக்கு ஒரு எழுத்து வீதம் ... மேலும்
 
temple news
தீமையை வேகமாகச் செய்து முடித்து விடலாம். ஆனால், நல்ல காரியங்கள் செய்வது கஷ்டமான விஷயம். அதில் பல தடைகள் ... மேலும்
 
temple news
சுரசா! வாயுபுத்திரன் ஆஞ்சநேயன் ஆகாயவழியில் வருகிறான். அவனுக்கு சற்றுநேரம் இடைஞ்சல் கொடு. நீ வைக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar