பதிவு செய்த நாள்
26
ஜூலை
2013
10:07
கோவில்பட்டி: கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் ஆடித்தபசு திருவிழா நடந்தது. கோவில்பட்டி வீர வாஞ்சி நகர் சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் ஆடித்தபசு திருவிழா நடந்தது. கடந்த 12ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் தொடர்ந்து பத்து நாட்கள் மண்டகப்படிதாரர்கள் முறையில் நிகழ்ச்சிகள் நடந்தது. இதையடுத்து 11வது நாள் திருநாளாக ஆடித்தபசு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து கும்பகலசபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரகஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. கோடிசக்தி விநாயகர், கல்யாண முருகன், சங்கரலிங்கசுவாமி, சங்கரேஸ்வரி அம்பாள், பரிவார மூர்த்திகள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. கோவில்பட்டி சுற்றுவட்டார பொதுமக்கள் சுவாமி அம்பாளின் ஆடித்தபசு காட்சியை பார்த்து சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து ஆடித்தபசு சிறப்பு அன்னதானத்தை கோவில்பட்டி நகராட்சி சேர்மன் ஜான்சிராணி துவக்கி வைத்தார். நகராட்சி துணை சேர்மன் ராமர், அதிமுக நகர செயலாளர் சங்கரபாண்டியன், கவுன்சிலர்கள் மாரியம்மாள், பத்மாவதி, ராஜலட்சுமி, வெள்ளத்துரை, பரமசிவம், வேலாயுதபுரம் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேஸ்கண்ணன், சங்கரேஸ்வரி அம்பாள் கோயில் தலைவர் குருசாமி, செயலாளர் சுப்பையா, பொருளாளர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.