மேலூர்:மேலூரில் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழா கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ரத ஊர்வலம் நடந்தது.யூனியன் அலுவலகம் முன்பு பூரண கும்ப மரியாதையுடன் ரத ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. டாக்டர் கிருஷ்ணன் மற்றும்பலர் வரவேற்றனர். மேலூர் எஸ்.எஸ்.வி., சாலா பள்ளி, சுப்பிரமணிய பாரதி பள்ளி, ஏசியன் மெட்ரிக் பள்ளிக்கு ரதம் சென்றது. மில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. நகைக் கடை மற்றும் செக்கடி பகுதியில் வியாபாரிகள் ரதத்தை வரவேற்றனர்.