பதிவு செய்த நாள்
27
ஜூலை
2013
10:07
தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா சர்ச் திருவிழா, நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது; ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக, சிறப்பு வாய்ந்த, தூத்துக்குடி பனிமய மாதா சர்ச், 431ம் ஆண்டு திருவிழா மற்றும் பேராலயம் கட்டப்பட்டதன், 300வது ஆண்டு நிறைவு விழா, நேற்று துவங்கியது. சர்ச் எதிரே, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில், காலை, 8:55 மணிக்கு, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில், கொடியேற்றம் நடந்தது. உலக சமாதானத்தை வலியுறுத்தி, புறாக்கள் பறக்கவிடப்பட்டன; பழைய துறைமுகத்தில் இருந்து சங்கொலி எழுப்பப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு, பனிமய மாதாவுக்கு பொன்மகுடம் அணிவிக்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான, தங்கத் தேரோட்டம், 11ம் நாளான, ஆக.,5ம் தேதி, காலை, 9:00 மணிக்கு நடக்கிறது.