சிதம்பரம்: கீழத்தெரு மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நேற்று நடந்தது. சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி மாதம் பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, மாரியம்மனுக்கு தினம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் மாரியம்மன் புறப்பாடு நடந்தது. தேரோட்டம் நேற்று நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்து, காலை 9.00 மணிக்கு அம்மன் புறப்பாடு செய்து நடராஜர் கோவில் கிழக்கு சன்னதியில் எழுந்தருளினார். மதியம் 12.00 மணிக்கு மாரியம்மன் தேரில் எழுந்தருளி நடராஜர் சுவாமி பட்டு சார்த்தி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நான்கு வீதிகளில் தேரோட்டம் நடந்தது.