பதிவு செய்த நாள்
30
ஜூலை
2013
11:07
சேலம்: ஆடி மாத திருவிழாவையொட்டி, கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் நடும் நடு விழா நடக்கிறது.சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில், குகை மாரியம்மன் கோவில், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில், அம்மாபேட்டை பலபட்டறை மாரியம்மன் கோவில், உள்ளிட்ட அம்மன் கோவில்களில், கடந்த ஆடி மாதம் 1 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன், ஆடித் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கம்பம் நடும் விழா, கோட்டை மாரியம்மன் கோவிலில், இன்று மாலை, 6 மணியளவில் விமர்சையாக நடைபெற உள்ளது. பல்வேறு மாரியம்மன் கோவில்களிலும், இன்று கம்பம் நடும் விழா, நடைபெறுகிறது.