திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா நாளை (31ம் தேதி) துவங்குகிறது.கோயிலில் காந்திமதி அம்பாள் சந்நிதியில் ஆடிப்பூர திருவிழா நாளை காலை 6.54 மணிக்கு மேல் 7.24 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆகஸ்ட் 9ம் தேதி வரை திருவிழா நடக்கிறது.4ம் திருநாள் 3ம் தேதி பகல் 12 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் உலா நடக்கிறது. ஆடிப்பூரம் 10ம் திருநாள் 9ம் தேதி இரவு 7.27 முதல் 7.57 மணி வரை ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டுத்திருநாள் நடக்கிறது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், பணியாளர்கள் செய்துள்ளனர்.