பதிவு செய்த நாள்
31
ஜூலை
2013
10:07
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்களின் சார்பில், ஆறாவது ஆண்டாக ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சாய்ராம் மகாலில் நடந்தது. திருப்பூர் மாவட்ட சத்ய சாய் சேவா நிறுவனங்களின் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். நிகழ்ச்சி துவங்கியதும் சத்ய சாய் பற்றி பாடல் பாடப்பட்டது. அதன் பின் பள்ளி வாசல் அஜரத் முகமது அலி ஜின்னா நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நோன்பு கஞ்சி, பலகாரம், பழங்கள் வழங்கப்பட்டன. தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் ஹபிபுல்லா பேசுகையில், ""சத்ய சாய் சேவா நிறுவனங்களின் சார்பில், கடந்த ஆறு ஆண்டுகளாக ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. உலக அமைதியும், அன்பும் ஏற்பட வேண்டுமென்று, இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதனால் மனித நேயம் வளரும், என்றார். நிகழ்ச்சியில் ஐக்கிய ஜமாத் பேரவை செயலர் அக்பர்அலி, மின்வாரிய செயற்பொறியாளர் முகமது முபாரக், முகமது அலி ஜின்னா ஆகியோர் பேசினர்.