உடுப்பி அருகிலுள்ள பாஜீகம் என்ற ஊரில் நாராயணபட்டர், வேதவதி தம்பதிக்கு பிறந்தவர் மத்வர். இவரது இளவயது பெயர் வாசுதேவன். சிறுவயதில், இவரை உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு விளையாடிக் கொண்டிருந்தவரைக் காணவில்லை. 8 கி.மீ., தூரத்திலுள்ள அனந்தாஸம் கோயிலுக்கு சென்று விட்டார். பெற்றோர் பிள்ளையைத் தேடி கோயிலுக்கு வந்துவிட்டனர். தனியாக இவ்வளவு தூரம் வரலாமா? என்று அவர்கள் கேட்க, வாசுதேவன், தனியாக வரலையே! என்னோடு எப்போதும் கடவுள் இருக்கிறாரே! என்று மழலைமொழியில் பேசினார். பெற்றோர் மெய்சிலிர்த்துப் போயினர். இவரே துவைதம் என்னும் சித்தாந்தத்தை உருவாக்கியவர்.