பதிவு செய்த நாள்
01
ஆக
2013
10:08
திருப்புத்தூர்:திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று,காலை 10 மணிக்கு, கொடிப்படம், சக்கரத்தாழ்வார் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து,பெருமாளும்,ஆண்டாளும் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளினர். தொடர்ந்து பெருமாளுக்கும்,கொடிக்கும்,பூஜை, கொடியேற்றம் நடந்தது. திருமஞ்சம், ஆராதனைக்குப் பின்னர் ஆண்டாளும்,பெருமாளும் பள்ளியறை எழுந்தருளினர். மாலையில், ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் காப்புக் கட்டி 10 நாள் உற்சவம் துவங்கியது. இரவில் தங்கப்பல்லக்கில் ஆண்டாள்,பெருமாள் திருவீதி உலா நடந்தது.ஆக.9ம் தேதி ஆண்டாள் அவதார தினத்தை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெறும்.