பதிவு செய்த நாள்
01
ஆக
2013
10:08
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், ஆடித் திருவிழாவை யொட்டி, சுவாமி தங்கம், வெள்ளி வாகனங்கள் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. ஆடித் திருக்கல்யாணத்தை யொட்டி, ராமேஸ்வரம் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் தங்க, வெள்ளி வாகனத்தில் வீதி உலா வருவார். ஆனால், தூசி, கருப்பு நிறம் படிந்த சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்தி தங்க சிலைகள் மற்றும் தங்கம், வெள்ளி கிளி, காளை வாகனத்தை புதுப்பித்து, வீதி உலா கொண்டு வர, மதுரை ஐகோர்ட், கடந்தாண்டு உத்தரவிட்டது. அதன்படி, இந்தாண்டு நடக்கவுள்ள, ஆடித் திருவிழாவில் அம்மன் வீதி உலா வர, கோயில் உள்ள தங்கம், வெள்ளி வாகனங்களை, புளிகாப்பு, ரசாயனம் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து, புதுப்பிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.