நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2013 10:08
திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 3ம் தேதி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு தோறும் ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்பாள் சன்னதியில், நேற்று காலை 7.15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இஐதமுன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்புஅபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி தினமும் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதில் வரும் 3ம் தேதிபகல் 12 மணிக்கு அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் ஊஞ்சல் மண்டபத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி அம்பாளுக்கு வளையல்களை காணிக்கையாக செலுத்துவர்.தொடர்ந்து அன்றைய தினம் இரவு 7 மணிக்கு ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்பாள் உட்பிரகார வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.10ம் திருநாளில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு ஆடிப்பூர முளைப்பாரி கட்டும் சிறப்பு வைபவம் நடக்கிறது. இதில் பெண்கள் விரதமிருந்து நவதானியங்களை முளைப்பாரியாக எடுத்து வந்து, பட்சணங்களை கொண்டு காந்திமதி அம்பாளுக்கு மடி நிரப்பி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றது.