ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் உள்ள ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. ஊத்துக்கோட்டையில், ஐந்தாம் ஆண்டு ஆடிக் கிருத்திகை விழாவை ஒட்டி, திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், பஜாரில் உள்ள நாகவல்லியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருகப் பெருமான், சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் உள்ள முருகப்பெருமான் மற்றும் கிராமத்தில் உள்ள கோவில்களில் ஆடிக் கிருத்திகை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டன.