மயிலம்:மயிலம் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடந்தது. மயிலம் வள்ளி,தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் போன்ற பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் வேண்டுதலுக்காக மலையடிவாரத்தில் பொங்கலிட்டு, படையலிட்டனர். முற்பகல் 11:00 மணிக்கு நடந்த சுவாமி மகா தீபாராதனைக்கு, பிறகு தங்க கவசத்தில் சுவாமி அருள் பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவல காட்சி நடந்தது. ஆடி மாத கிருத்திகை என்பதால் நேற்று மக்கள் கூட்டம், கோவில் வளாகத்தில் நிரம்பி வழிந்தது.