பதிவு செய்த நாள்
01
ஆக
2013
10:08
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், நேற்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, சஷ்டி குழு சார்பில், சிவலோகநாதர், சிவலோகநாயகி, முருகன் போன்ற மூலவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்யப்பட்டது. இதில், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், அரிசிமாவு, சந்தனம், குங்குமம் போன்றவைகளால் அபிஷேக பூஜை செய்யப்பட்டது. பூக்களால், சிவலோகநாதர் மற்றும் சிவலோகநாயகி மூலவர்களுக்கு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம், கவசம் அணிவிக்கப்பட்டது. இதில், கிணத்துக் கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முருகனை வழிபட்டனர்.